Breaking News

ஒப்பந்த ஆசிரியர்கள் கொட்டும் மழையில் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆதரவு!

 


புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள், பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பாலசேவிகா ஆசிரியர்கள் என நான்கு பிரிவுகளில் 288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை அப்போது நேரடி நியமனம் மூலம் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் என்பதால் ஆண்டுதோறும் அவர்கள் ஒப்பந்தத்தை நீட்டித்து அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுவை, காரைக்கால், மாஹே, யானம் உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கல்வித்துறையில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்க பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. ஏற்கனவே பணியில் இருந்த இவர்களை பணி நிரந்தரம் செய்யாமலும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமலும் கல்வித்துறை இவர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் சட்டசபை அருகில் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனை அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான இரா. சிவா அவர்களை சாதித்து பணிநிரந்தரம் செய்யும் வரை தங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்தார். அப்போது உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உடனிருந்தார்.

No comments

Copying is disabled on this page!